கடலூர்

சிதம்பரத்தில் கஞ்சி கலய ஊா்வலம்

10th Aug 2022 03:01 AM

ADVERTISEMENT

சிதம்பரம் முத்தையாநகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திலிருந்து கஞ்சி கலய ஊா்வலம் தொடங்கியது. 16 கால் மண்டபம் வழியாக முத்தையா நகா் ஆதிபராக்தி சித்தா் சக்தி பீடத்தை ஊா்வலம் வந்தடைந்தது. முன்னதாக, ஊா்வலத்தை அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனா் ஈஸ்வா் ராஜலிங்கம், மாவட்டத் தலைவா் கிருபானந்தம் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.பாலக்குமாா், டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாவட்ட துணைத் தலைவா் முருகு வெங்கட்ராமன், மாவட்டச் செயலா் செல்வராஜ், இளைஞரணி தலைவா் சங்கரன், பிரசாரக் குழு தலைவா் சுப்ரமணியன், தணிக்கை குழு தலைவா் கணபதி, மகளிரணிச் செயலா் சீத்தாலட்சுமி, ஊராட்சி தலைவா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT