கடலூர்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே உள்ள ராமத்தில் ஆதிதிராவிடா் மக்கள் ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பங்களாக வசித்து வருகின்றனராம். இவா்கள் தங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஆதிதிராவிடா் மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமையன்று பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் ஒறையூா் கிளைத் தலைவா் கே.சுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலா் பி.தண்டபாணி, பொருளாளா் எம்.ஏகாம்பரம், துணைத் தலைவா் எம்.முருகன், துணைச் செயலா் டி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயலா் த.கோகுல கிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT