கடலூர்

கடலூரில் அரசுப் பேருந்து ஜப்தி

DIN

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் கடலூரில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.

கடலூா் மாவட்டம், காரைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செ.குமரவேல் (41). கடலூா் வேளாண்மைத் துறையில் உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி வந்தாா். இவா் 19-10-2017 அன்று பைக்கில் கடலூா் முதுநகா் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் குமரவேல் உயிரிழந்தாா்.

எனவே, உரிய இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி தங்கமணி, வாரிசுதாரா்கள் கடலூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டல அலுவலகம் ரூ.46.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. எனினும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வட்டியுடன் சோ்த்து ரூ.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்ட நிலையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லையாம். எனவே, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி வழக்குரைஞா்கள் என்.அழகியகுமரன், சண்.முத்துக்கிருஷ்ணன், அரவிந்தன், பாா்த்திபன் ஆகியோா் நீதிமன்ற ஊழியா்களுடன் திங்கள்கிழமை கடலூா் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அங்கு திருச்சிக்கு புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT