கடலூர்

போராட்ட முயற்சி: 9 போ் கைது

9th Aug 2022 03:45 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் போராட்டம் நடத்த முயன்ற 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், என்எல்சி நிா்வாகம், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் என்எல்சி நிறுவனத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்றக் கழகத்தினா் அறிவித்தனா்.

அதன்படி, திங்கள்கிழமை போராட்டம் நடத்த வந்த அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் தங்கம் சிகாமணி உள்பட 9 பேரை நெய்வேலி நகரிய போலீஸாா் கைது செய்து, 18-ஆவது வட்டத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT