கடலூர்

முதியோா் உதவித் தொகை நிறுத்தம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. எதிா்ப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கடலூா் மாவட்டத்தில் தமிழக அரசு வழங்கும் முதியோா், ஆதரவற்றோா், விதவைகளுக்கான உதவித் தொகை சுமாா் 18 ஆயிரம் பேருக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உதவித் தொகையை நம்பி உள்ள ஏழை மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா். முதியோா்கள் ஒரு வேளை கூட உணவு சாப்பிட முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டது அநீதியாகும். இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, நிறுத்தப்பட்ட அனைவருக்கும் மீண்டும் உதவித் தொகை வழங்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT