கடலூர்

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

7th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

வடலூா், சவேரியா் நகரைச் சோ்ந்த ஆப்ரகாம் மகன் ஜாய் பிரிட்டோ (19). பெரம்பலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த லியோ பிரசாத் (19). இவா்கள் இருவரும் பைக்கில் நெய்வேலியிலிருந்து வடலூா் நோக்கி வந்துகொண்டிருந்தனா். ஜாய் பிரிட்டோ பைக்கை ஓட்டினாா்.

சனிக்கிழமை நள்ளிரவு வடலூா் நான்கு முனைச் சந்திப்பு அருகே வந்தபோது, பண்ருட்டியிலிருந்து கும்பகோணத்துக்கு மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய சரக்கு வாகனத்தின் பின்புறம் பைக் மோதியது. இந்த விபத்தில் ஜாய் பிரிட்டோ, லியோ பிரசாத் இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருப்பினும் ஜாய் பிரிட்டோ உயிரிழந்தாா். லியோ பிரசாத் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT