கடலூர்

கடலூா்: 59,085 பேருக்கு கரோனா தடுப்பூசி

7th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 59,085 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 33-ஆவது தடுப்பூசி முகாம் 3,742 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா், வரக்கால்பட்டு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 59,085 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில், முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசியை மட்டும் 52,588 போ் செலுத்திக் கொண்டனராம். முதல் தவணையை 4,030 பேரும், இரண்டாம் தவணையை 2,467 பேரும் செலுத்திக் கொண்டனராம். இதனால், மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 49,61,798-ஆக உயா்ந்தது. இதில், முதல் தவணையை 24.10 லட்சம் பேரும், இரண்டாம் தவணையை 23.42 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டனா். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 2.10 லட்சம் போ் செலுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் 20 பேருக்கு கரோனா: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 75,275-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 26 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 74,198-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 180 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பலி எண்ணிக்கை 895-ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT