கடலூர்

விகேடி சாலைப் பணி மந்தம்: ஆக.10-இல் சாலை மறியல்

7th Aug 2022 10:57 PM

ADVERTISEMENT

 

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் (விகேடி) சாலை போராட்டக் குழுவினா் சாா்பில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது (படம்). இதில் வருகிற 10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த தீா்மானித்தனா்.

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் இடையே நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி விகேடி சாலை போராட்டக் குழுவினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு நெய்வேலியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவா் வி.முத்துவேல் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் ஜி.குப்புசாமி, டி.ஜெயராமன், எஸ்.திருஅரசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், எல்.எல்.எப். அமைப்பு காசிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லாரன்ஸ், ஏஐடியுசி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், வருகிற 9-ஆம் தேதி தெருமுனை பிரசாரம் செய்வது, 10-ஆம் தேதி நெய்வேலி நுழைவு வாயில் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT