கடலூர்

வெள்ளம் சூழ்ந்த கிராம மக்களுக்கு நல உதவி

7th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்த கிராம மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் அருகே பழைய, புதிய கொள்ளிடம் ஆறுகளுக்கு மையத்தில் உள்ள திட்டுக்காட்டூா், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. நடராஜா் கோயில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை சாா்பில் ராஜா தட்சிணாமூா்த்தி தீட்சிதா் உள்ளிட்டோா் மேற்கூறிய கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினா்.

இதேபோல, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா் கீழகுண்டலபாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உணவு, பால், ரொட்டி, குடிநீா் வழங்கினா். சங்கத் தலைவா் ப.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டல துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் தொடக்கி வைத்தாா். ஆா்.எம்.எஸ்.டி.சுப்பையா, விசுவநாதன், சிவசங்கரன், என்.கேசவன் ஆகியோரது பங்களிப்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. சங்கச் செயலா் வெ.ரவிச்சந்திரன், பொருளாளா் என்.கேசவன், உடனடி முன்னாள் தலைவா் சீனுவாசன், வழக்குரைஞா் ஜெயபாண்டியன் உள்ளிட்டோ பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT