கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

7th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பள்ளியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வடலூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகன் பிரான்சிஸ் (26). பெயிண்டா். இவா், ஞாயிற்றுக்கிழமையன்று வடலூா் - சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின் கம்பியில் பிரான்சிஸ் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT