கடலூர்

மருத்துவ மாணவா்கள் போராட்டம்: பல்கலை. நிா்வாகம் நோட்டீஸ்

29th Apr 2022 10:04 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை 9-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் நோட்டீஸ் அளித்தது.

இந்தக் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவா்கள் கடந்த 21-ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டம் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. அப்போது மாணவா்கள் கூட்டுப் பிராா்த்தனை செய்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களின் தொடா் போராட்டத்தையொட்டி கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டம் தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT