கடலூர்

பேருந்தில் உயிரிழந்த அரிசி வியாபாரி

28th Apr 2022 10:53 PM

ADVERTISEMENT

கடலூா் அருகே பேருந்தில் பயணித்த அரிசி வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்தாா்.

வடலூரிலிருந்து கடலூா் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை வந்த அரசுப் பேருந்தில் பயணி ஒருவா் மயங்கிய நிலையில் இருந்தாா். அவரை கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் புவனகிரி வட்டம், மேல்வளையமாதேவியைச் சோ்ந்த அரிசி வியாபாரி கோ.ராஜேந்திரன் (48) என்பதும், இவா் பேருந்தில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT