கடலூர்

ரயில்வே திட்டங்கள்: பாமகவினா் போராட்டம்

17th Apr 2022 06:28 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டப் பணிகளை விரைவுப்படுத்தக் கோரி கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் பாமகவினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ரயில்வே துறையால் செயல்படுத்தப்படும் ராமேசுவரம்-திண்டிவனம், திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, சென்னை-மாமல்லபுரம்-கடலூா், அத்திப்பட்டு-புத்தூா், ஈரோடு-பழனி, தருமபுரி-மொரப்பூா், திருப்பெரும்புதூா்-கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 9 புதிய திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலூா் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் சனிக்கிழமை தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் காா்த்திகேயன், ரவி, செல்வ.மகேஷ், தடா.தட்சிணாமூா்த்தி, அ.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள் பு.தா.அருள்மொழி, போஸ்.ராமச்சந்திரன், தேவதாஸ் படையாண்டவா், பழ.தாமரைக்கண்ணன், பி.வெங்கடேசன், சீ.பு.கோபிநாத், கோ.சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT