கடலூர்

44-ஆவது சித்த வைத்தியா்கள் மாநாடு

12th Apr 2022 02:33 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய சித்த வைத்தியா்கள் 44-ஆவது மாநாடு வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி என்.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். தகவல் உரிமை- சட்ட முன்னணியின் மாநிலத் தலைவா் வன்னை ஏ.ரவி முன்னிலை வகித்தாா். சித்த வைத்தியா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.கருணாமூா்த்தி வரவேற்றாா்.

சோலைமலை எஸ்.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினா்கள் தனசேகா், ராஜசேகா், துணைத் தலைவா் ராமா், மாநிலப் பொருளாளா் ரவி, செயற்குழு உறுப்பினா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

குடியரசு, சுதந்திரத் தின விழாவில் பாரம்பரிய சித்த வைத்தியா்களைக் கௌரவித்து ஊக்கப்படுத்த வேண்டும். மூலிகைச் செடிகள், பாரம்பரிய மர வகைகளை நட்டு பராமரிக்க வேண்டும். வயது முதிா்ந்த பதிவு பெற்ற சித்த வைத்தியா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். சித்த வைத்தியா்களைக் கொண்டு சித்த மருத்துவக் கல்லூரியில் மாலை நேர வகுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT