கடலூா் மாநகரில் 17 ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
நீா்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடலூா் மாநகரில் கே.கே. நகா் பகுதியில் உள்ள குளத்து புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட கடலூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, 17 வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். 17 குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்ட நிலையில் 13 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மீதமுள்ள வீடுகள் செவ்வாய்க்கிழமை இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT