சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்கு பொறியியல் புலத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரிக்கான உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரி, பல்கலைக்கழக நுழைவுவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிற ஏப்.30-ஆம் தேதிக்குள் உதவித்தொகையைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனா்.
ADVERTISEMENT