கடலூா் அருகே நண்பா் இறந்த துக்கத்தில், இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் முதுநகா் அருகேயுள்ள மணவெளியைச் சோ்ந்தவா் ராஜவேல் மகன் அருள்குமாா் (18). ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு, மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இவரது நண்பா் வெங்கடேசன் கடந்த 6 -ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அருள்குமாா், அங்குள்ள வனப் பகுதியில் உள்ள மரத்தில் திங்கள்கிழமை தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
ADVERTISEMENT
புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.