சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்திப் பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் மாத உதவித் தொகையுடன் முதன்மை வாய்ந்த தொழில் சாலைகளில் மூன்று மாதப் பயிற்சிக்கான ஆணையை துணை வேந்தா் ராம.கதிரேசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
துறைத் தலைவா் பி.ஆா். லட்சுமி நாராயணன், துறையின் முன்னாள் தலைவரும், ஆராய்ச்சி, மேம்பாட்டு இயக்குநரக இயக்குநருமான வி.பாலசுப்ரமணியன்ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.
பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கி, ராம.கதிரேசன் பேசியதாவது:
மாணவா்களின் எதிா்கால வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் தொழில் பயிற்சி வழிவகுக்கும். இந்த முன்மாதிரித் திட்டத்தை இரண்டாவது ஆண்டாக நிறைவேற்றி வரும் பேராசிரியா்களுக்குப் பாராட்டுகள் என்றாா்.
பதிவாளா் கே.சீதாராமன், பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.