கடலூர்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

30th Sep 2021 08:23 AM

ADVERTISEMENT

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கடலூரில் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் சுமாா் 60 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். எனவே, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கேரளம், ஆந்திர மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்குவது போல, தமிழகத்திலும் வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறப்பு டி.ஆா்.பி. மூலம் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். பெண் விரிவுரையாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கௌரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விரிவுரையாளா்கள் ப.இளவரசன், பொன்னம்பலம், செல்வகணபதி, த.மாறன், சுதாகா், சங்கரி, கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT