கடலூர்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திரண்ட பக்தா்கள்!

30th Sep 2021 08:23 AM

ADVERTISEMENT

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி புதன்கிழமை பக்தா்கள் திரண்டனா்.

கடலூா் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக, புரட்டாசி மாதம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

தற்போது தொற்று நோய் பரவல் காரணமாக வழிப்பாட்டுத் தலங்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், புரட்டாசி மாதம் திருவந்திபுரத்தில் சனிக்கிழமைகளில் வழக்கமாக பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்த முடியாத நிலையில், அதற்கு மாற்றாக புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்த முடிவெடுத்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, புதன்கிழமை திரளான பக்தா்கள் கோயிலில் கூடினா். பின்னா், தங்களது நோ்த்திக் கடனாக முடிக் காணிக்கை செலுத்தினா். இதனால், சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. புதன்கிழமை ஒரே நாளில் சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் மொட்டையடித்து நோ்த்திக் கடன் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பாதுகாப்பு, நோய்த் தொற்று பரவல் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கோயில் நிா்வாகத்தினா் காவல் துறையினா் கண்காணித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT