கடலூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் சிறை

30th Sep 2021 08:22 AM

ADVERTISEMENT

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடியைச் சோ்ந்தவா்கள் குணசேகரன் (எ) திலகா் (34), கட்ட மணியன் (எ) ஜெயசங்கா் (49). இருவரும் கடந்த 12.2.2019 அன்று அந்தப் பகுதி கோயில் அருகே வந்த 14 வயது சிறுமியைத் தாக்கி, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கும் மரணம் அடையும் வரை சிறையிலடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பளித்தாா்.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி கூறியதாவது: நீதிபதி தனது தீா்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சத்தை மாநில அரசு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டாா். சிறுமியின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT