கடலூர்

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

30th Sep 2021 08:24 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே ஏரியில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூா் கிராமம், கிழக்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (28). எலக்ட்ரீஷியன். இவா், செவ்வாய்க்கிழமை ஏரியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ராஜாவை தேடினா். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, புதன்கிழமை மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினா். 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த ராஜாவின் உடலை இறந்த நிலையில் மீட்டனா்.

ADVERTISEMENT

முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் சடலத்தை உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும்: இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொரத்தூா் ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தியது. தற்போது இந்த ஏரியில் சுமாா் 15 ஆடி ஆழத்துக்கும் மேல் தண்ணீா் தேங்கியுள்ளது. ஆனால், ஒரு எச்சரிக்கைப் பலகையைக்கூட வைக்கவில்லை. எனவே, உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT