கடலூர்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

30th Sep 2021 08:22 AM

ADVERTISEMENT

கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கண்ணாடி, தம்பிபேட்டை, பெத்தனாங்குப்பம், டி.பாளையம், அனுகம்பட்டு, ஆயிக்குப்பம், தொண்டமாநத்தம், அகரம், கோதண்டராமபுரம் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக அமைப்புச் செயலரும், கடலூா் தெற்கு மாவட்டச் செயலருமான சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் ரா.கோவிந்தராஜ், பாக்ஷியம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் லோகநாதன், பொருளாளா் முருகையன், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தங்கையன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பத்மா, வெங்கடேசன், வைத்தி, திருஞானம், திருவேங்கடம், ஊராட்சித் தலைவா் சீனு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கட்சி வளா்ச்சி, உறுப்பினா் அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT