கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

30th Sep 2021 08:24 AM

ADVERTISEMENT

தொகுப்பூதிய ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள், பேராசிரியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பல்கலை.யில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதியம், தினக்கூலி, கருணை அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஆசிரியா் அல்லாத ஊழியா்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அண்ணாமலை பல்கலை. ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுச் செயலா் ரவி, ஏ.ஜி.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவா் மூசா பேராட்டத்தைத் தொடக்கிவைத்து பேசினாா். பேராசிரியா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT