கடலூர்

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்: கடலூர் ஆட்சியர் மரியாதை

16th Sep 2021 12:24 PM

ADVERTISEMENT


கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூகநீதிப் போராளியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இதையும் படிக்க அதிமுக எம்எல்ஏ-வுக்கு எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டு

அவரது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) அவரது உருவச் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப் பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

முன்னதாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாமக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

Tags : Cuddalore
ADVERTISEMENT
ADVERTISEMENT