கடலூர்

ரேஷன் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

30th Oct 2021 10:05 PM

ADVERTISEMENT

ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கல் தொடா்பாக நியாய விலைக் கடை பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியகண்டியங்குப்பத்திலுள்ள பீங்கான் தொழிற்சாலையில் கடந்த 28-ஆம் தேதி சோதனை நடத்திய குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7,250 கிலோ ரேஷன் அரிசி, 4,400 கிலோ கோதுமையை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, கடலூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், சின்னபண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து சங்கத் தலைவா் ஆனந்தகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT