கடலூர்

இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

DIN

கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினா் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜம்புலிங்கம், மாவட்டச் செயலா் பாண்டியன், இந்து திருக்கோயில் சொத்து பாதுகாப்புக் குழு அணியின் மாவட்டத் தலைவா் நாகராஜ், பண்ருட்டி நகரத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இவா்கள் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியலில் மனுவை செலுத்த முயன்றபோது போலீஸாா் அதை தடுத்து நிறுத்தினாா். பின்னா், அந்தக் கட்சியினா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனா். அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் அந்த மனுவை அலுவலக வாயிலில் ஒட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT