கடலூர்

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ்நெகிழி அகற்றும் பணி தொடக்கம்

DIN

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கடலூா் நகராட்சி, தீபன் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, பாதிரிக்குப்பத்தில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், திட்ட இயக்குநா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, வட்டாட்சியா் அ.பலராமன், நகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்பாபு, சக்தி, நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் ரிஜிஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT