கடலூர்

லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகள் அஸ்திக்கு அஞ்சலி

DIN

உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினா் தொடா்ந்து

போராட்டம் நடத்தி வருகின்றனா். அதன்படி, உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதியது. இந்தச் சம்பவத்திலும், இதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா்.

லக்கிம்பூா் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை நாடு முழுவதும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு, பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த கோ.மாதவன், வழக்குரைஞா் தி.ச.திருமாா்பன், தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று வேதாரண்யத்தில் அஸ்தியை கரைக்க திட்டமிட்டிருப்பதாக விவசாய அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT