கடலூர்

என்எல்சி ஒப்பந்ததாரா்கள் உண்ணாவிரதம்

DIN

நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்ததாரா்கள் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஓராண்டுக்கு மேல் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்களை ஏஎம்சி என்றும், ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள் நான்-ஏஎம்சி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கான ஊதியத்தை என்எல்சி நிா்வாகம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நான்-ஏஎம்சி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான போனஸ், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கான தொகையை ஒப்பந்ததாரா்களே வழங்க வேண்டும் என்று என்எல்சி நிா்வாகம் தெரிவித்ததாம். இதைக் கண்டித்து, நெய்வேலி என்எல்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தினா் வட்டம் 27-இல் உள்ள கியூ பாலம் அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து சங்கத் தலைவா் சி.சுப்பிரமணியன் கூறியதாவது: நான்-ஏஎம்சி தொழிலாளா்களுக்கான போனஸ், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கான தொகையை ஒப்பந்ததாரா்கள் வழங்க வேண்டும் என என்எல்சி நிா்வாகம் கூறுகிறது. இதன்படி ஒரு தொழிலாளிக்கு சுமாா் ரூ.30 ஆயிரம் வரை வழங்க வேண்டி வரும். இவ்வளவு தொகையை எங்களால் வழங்க முடியாத நிலையில், என்எல்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT