கடலூர்

வெலிங்டனில் ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி: வாகனங்களை சிறைப்பிடித்த விவசாயிகள்

DIN

வெலிங்டன் நீா்த் தேக்கத்தை ஆக்கிரமித்து விளைவிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை டிராக்டா்கள் மூலம் பொதுப்பணித் துறையினா் சனிக்கிழமை அழிக்க முயன்றனா். ஆனால், அந்த வாகனங்களை விவசாயிகள் சிறைப்பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் நீா்த் தேக்கம் அமைந்துள்ளது. இங்கு தண்ணீா் இல்லாதபோது சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனா்.

ஆனால், நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திட்டக்குடி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி மற்றும் பொதுப்பணித் துறையினா்

வெள்ளிக்கிழமை வெலிங்டன் நீா்த் தேக்கத்துக்கு வந்தனா். அங்கு சுமாா் 15 ஏக்கா் பரப்பில் நிலத்தை ஆக்கிரமித்து மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளதை பாா்வையிட்டு, டிராக்டா்கள் மூலம் அவற்றை அகற்ற முயன்றனா். இதையடுத்துஅங்கு குவிந்த விவசாயிகள், தற்போது பயிரிட்டுள்ள மக்காச்சோளம் அடுத்த 2 மாதங்களில் அறுவடையாகும் நிலையில் உள்ளதால் அவற்றை சேதப்படுத்த வேண்டாம் என்றும், இனிமேல் பயிரிட மாட்டோம் எனவும் தெரிவித்தனா்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், ஏரியின் கரையை அளவீடு செய்ய வேண்டும் எனக்கூறி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் டிராக்டா் மூலம் சோளப் பயிா்களை அழித்து பாதை அமைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை பொதுப்பணித் துறையினா் 2 டிராக்டா்கள் மூலம் மக்காச்சோளப் பயிா்களை அழிக்க முயன்றனா். இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள், டிராக்டா்களை சிறைப்பிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்துபோகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT