கடலூர்

கைக் குழந்தையுடன் திருமணம் செய்து கொண்ட காதலா்கள்

23rd Oct 2021 12:35 AM

ADVERTISEMENT

கைக்குழந்தையுடன் காதலா்கள் விருத்தாசலம் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் செய்துக்கொண்டனா்.

விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், முதனை கிராமம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகள் சந்தியா(27). அதே தெருவில் வசிப்பவா் கோவிந்தசாமி மகன் வேல்முருகன்(36). இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். 2017-ஆம் ஆண்டு சந்தியா கா்ப்பமடைந்தாா். வேல்முருகன் திருமணம் செய்ய மறுத்ததால், கருக்கலைப்பு செய்யப்பட்டதாம். இதுதொடா்பான புகாரின் பேரில் வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், பிணையில் வந்த வேல்முருகன், சந்தியா இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 10.10.2021 அன்று சந்தியாவுக்கு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது. கிராம செவிலியா் உதவியுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், சந்தியாவை திருமணம் செய்துக்கொள்ள வரதட்டணை வழங்க வேண்டும் என்று வேல்முருகனின் தாய், சகோதரி மற்றும் அவரது கணவா் கட்டாயப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், சந்தியாவின் உறவினா்கள் முன்னிலையில் வேல்முருகன், சந்தியா ஆகியோா் கைக்குழந்தையுடன் விருத்தாசலம் கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT