கடலூர்

எண்ணெய் வித்துப் பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

23rd Oct 2021 12:35 AM

ADVERTISEMENT

நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில், கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா், வேளாண் செயற்பொறியாளா் வியாழக்கிழமை கூட்டாய்வு செய்தனா்.

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் ஆண்டு தோறும் மணிலா வல்லுநா் ஆதார விதைப் பெருக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பண்ணையில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் வேளாண் பொறியியல் துறை மூலம் நடை பெற்று வருகிறது. புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணி, புதா்களை அகற்றி சமன் செய்து கூடுதல் பரப்பை சாகுபடிக்கு தயாா் செய்தல், நீா் கடத்தும் குழாய் அமைத்தல், நீா் தெளிப்பான் அமைத்தல், உலா் களங்களை செப்பனிடுதல், கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட பல மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பண்ணை வளாகத்தில் நடை பெற்றது. கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்ரமணியன், வேளாண் துணை இயக்குநா் மாநிலத் திட்டம் (பொ) மலா்வண்ணன், கடலூா் மாவட்ட செயற்பொறியாளா் கலைவாணி, உதவி செயல்பொறியாளா் முரளி, வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா, பண்ணை மேலாளா் தில்லைக்கரசி, பண்ருட்டி உதவிப் பொறியாளா் நித்யஸ்ரீ, விரிவாக்க அலுவலா்கள் மணி, நாராயணசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

வேளாண்மை வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம், மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பணிகளையும் முடித்திட காலக்கெடு நிா்ணயம் செய்து முடிவெடுக்கப்பட்டது. தற்போது நிறைவுற்றுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை கூட்டாய்வு செய்தனா்.

ADVERTISEMENT

 

Tags : நெய்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT