கடலூர்

என்எல்சி ஊழியா் வீட்டில் திருட்டு

23rd Oct 2021 12:35 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி ஊழியா் வீட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், மேலக்குப்பம் கிராமம், வடக்குத் தெருவில் வசிப்பவா் க.வீரப்பன் (51), என்எல்சி நிறுவன ஊழியா். இவா், 20-ஆம் தேதி இரவுப் பணிக்குச் சென்றிருந்தாா். இவரது மனைவி நெய்வேலியில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மா்ம நபா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து வெள்ளி, பித்தளைப் பொருள்களை திருடிச் சென்றனா். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ.16 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது. இதுகுறித்து வீரப்பன் அளித்த புகாரின் பேரில் தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT