கடலூர்

நெய்வேலி தனியாா் பள்ளி ஆசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

21st Oct 2021 11:30 PM

ADVERTISEMENT

ஊதிய பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தி, நெய்வேலியில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி வட்டம் 29-இல் தனியாா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமாா் 1,500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் சுமாா் 60 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். கடந்த 14-ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை பள்ளி வளாகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். 2017-இலிருந்து திருத்தப்பட்ட ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் த.சுந்தரேசன், ஆசிரியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை மனுவைப் பெற்றுச் சென்றாா்.

 

Tags : நெய்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT