கடலூர்

கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

21st Oct 2021 11:31 PM

ADVERTISEMENT

கடலூரில் கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் செம்மண்டலத்தில் உள்ள கட்டுமான நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிடபிள்யூஎப்ஐ மாவட்டத் தலைவா் கே.சீனுவாசன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலத் துணைத் தலைவா் பி.கருப்பையன், மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், சிடபிள்யூஎப்ஐ மாவட்டப் பொதுச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணப் பயன் உயா்வுக்கான அறிவிப்பு தொடா்பாக கடந்த செப்டம்பா் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தது தொடா்பாக அரசாணை வெளியிட வேண்டும், வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த இலவச வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வீட்டுமனை இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம், நல வாரிய உறுப்பினா் விபத்து மரணத்துக்கு ரூ.5 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். நீண்ட நாள்களாகத் தேங்கியுள்ள அனைத்துக் கேட்பு மனுக்களுக்கான பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் ஏ.பாபு, வி.திருமுருகன், எஸ்.காா்த்திகேயன், எம்.மனோரஞ்சிதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.கருணாகரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT