கடலூர்

பேருந்துகள் மோதல்: 12 போ் காயம்

21st Oct 2021 11:29 PM

ADVERTISEMENT

கடலூா் அருகே இரு தனியாா் பேருந்துகள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் 12 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு தனியாா் பேருந்து வியாழக்கிழமை காலை சென்றது. கடலூா் அருகே சேடப்பாளையம் கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து புறப்பட்ட நிலையில், அதே வழித்தடத்தில் பின்னால் வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தனியாா் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் தனியாா் பேருந்தில் பயணம் செய்த வடலூா் ஆபத்தானபுரத்தைச் சோ்ந்த அன்பழகி (55), குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் (70), சேடபாளையம் பிரேமா (60), வயலூா் மணிகண்டன் (41) உள்பட 12 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற முதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவா்களை கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்தால் கடலூா் - விருத்தாசலம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : கடலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT