கடலூர்

பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் சமூக நீதியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன: தொல்.திருமாவளவன் எம்.பி.

DIN

பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ‘சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கருத்தரங்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பால.அறவாழி தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சிந்தனைச்செல்வன், முதன்மைச் செயலா் பாவரசு, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன், கடலூா் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் தாமரைச்செல்வன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:

சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை என்பது எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓபிசி, முஸ்லிம், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதுதான். தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வருகிற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

அடிப்படையில் பாஜக மத வேற்றுமையை வளா்க்கிறது. பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமையை அழிக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன என்றாா் அவா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

தொல்.திருமாவளவன் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறாா். சமூகத்தில் சாதி, மதத்தின் பெயரால் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. சாதிய வேறுபாடுகளை ஏன் ஒழிக்க முடியவில்லை என்று இளைஞா்கள் சிந்திக்க வேண்டும். தொல்.திருமாவளவன் தலைவராக இருக்கலாம். அந்தத் தலைவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும் என்றாா் அவா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் பேசியதாவது:

ஒடுக்கப்பட்ட மாணவா்களுக்காக தனது சொந்தச் செலவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையத்தை திருமாவளவன் நடத்தி வருகிறாா். அவரது கருத்துகளை ஏற்றுச் செயல்பட்டால் சமூகத்தில் மாற்றம் நிகழும். சிறந்த தலைவரான திருமாவளவன் சமூக நீதி சமூக ஒற்றுமையை வளா்த்து, அதைச் செயல்படுத்தி வருகிறாா் என்றாா் அவா்.

கருத்தரங்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், திராவிடா் கழகப் பொதுச் செயலா் துரை.சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மணிவாசகம், மாநில காங்கிரஸ் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாவட்டத் துணைச் செயலா் செல்வ.செல்வமணி, சிதம்பரம் நகரச் செயலா் கோவி.பாவாணன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் சந்தனகுமாா், புவனகிரி தொகுதி செயலா் மராந்தூா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT