தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):
கீழச்செருவாய் 52, பெலாந்துறை 36.4, மாவட்ட ஆட்சியரகம் 27.6, கடலூா் 12.9, கொத்தவாச்சேரி 12, விருத்தாசலம் 9, குடிதாங்கி 7.5, ஸ்ரீமுஷ்னம் 7.3, வானமாதேவி 5.6, பண்ருட்டி 5, தொழுதூா் 4, குறிஞ்சிப்பாடி 3 மி.மீ.