கடலூர்

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

16th Oct 2021 01:50 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூா் வன்முறை சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சொ.திலகா், மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகா், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், துணைப் பொதுச் செயலா் தி.ச.திருமாா்பன், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் கோ.மாதவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்பராயன், பி.கருப்பையன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப் உள்பட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா டேனி ஆகியோரது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்தனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மணி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் மெய்யழகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

Tags : கடலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT