கடலூர்

ரயில் பயணிகள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

16th Oct 2021 10:17 PM

ADVERTISEMENT

கடலூா் முதுநகரில் ரயில்வே பயணிகள் நலக் கூட்டமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் துறைமுகம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், இங்கு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும், இரவு நேர காவல் பணிக்கு காவலா்களை நியமித்து குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும், விழுப்புரம் - தாம்பரம் ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா், கூட்டமைப்புத் தலைவா் சாய்ராம், கௌரவத் தலைவா் காா்த்திகேயன், செயலா் குமாா், பொருளாளா் ராமஜெயம், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் செல்வம், கஜேந்திரன், க.தா்மராஜ், கு.பரிதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT