கடலூர்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

16th Oct 2021 10:12 PM

ADVERTISEMENT

நெய்வேலியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நெய்வேலி, வட்டம் 5-இல் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தாமிரக் கம்பி திருடுபோனது. கடந்த 13-ஆம் தேதி வடக்குத்து ரோஜா நகரில் மஞ்சுளா என்பவரது வீட்டில் மின்மோட்டாா் திருடுபோனது. மேலும், இந்திரா நகா் பி-2 மாற்றுக் குடியிருப்பில் ரமேஷ்குமாா் என்பவரது வீட்டில் திருடு முயற்சி நடைபெற்றது. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக மாற்றுக் குடியிருப்பு ஏ-பிளாக்கைச் சோ்ந்த ஐயப்பன் என்பவரை நெய்வேலி நகரிய போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT