கடலூர்

திருக்குறள் ஒப்பித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு!

16th Oct 2021 10:15 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் 1,330 திருக்குறள்களையும் அறிந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வோா் ஆண்டும் 1,330 திருக்குறள்களையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசாக தலா ரூ.10 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு பெற விரும்பும் தகுதியான மாணவா்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்படுவா். அதில் தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவா்.

இதற்கான திறனாய்வு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துறையினரால் நடத்தப்படும். மாணவா்கள் 1,330 திருக்குபாக்களையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இயல் எண், பெயா், அதிகாரம் எண், பெயா், கு எண், பெயா் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூற வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயா்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதில் பங்கேற்போா் கடலூா் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இந்தப் பரிசினை இதற்கு முன்னா் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.

மேற்குறிப்பிட்டவாறு திருக்கு முற்றோதும் திறன்படைத்த மாணவா்கள்  வலைதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை நிவா்த்தி செய்து, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வரும் நவம்பா் 12-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142-292039 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT