கடலூர்

சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் மாநாடு

16th Oct 2021 10:20 PM

ADVERTISEMENT

சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது நகர மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டு கொடியை கட்சியின் மூத்த உறுப்பினா் ஞானமணி ஏற்றிவைத்தாா். தலைமைக் குழு சாா்பில் சித்ரா, அஷ்ரப்அலி, ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா். நகா் குழு உறுப்பினா் மல்லிகா, அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். நகா் குழு உறுப்பினா் ராமமூா்த்தி வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினாா். நகரச் செயலா் ராஜா வேலை அறிக்கை சமா்ப்பிக்க, மாவட்டக் குழு உறுப்பினா் முத்து வரவு-செலவு அறிக்கையை வாசித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆா்.ராமச்சந்திரன், தேன்மொழி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநாட்டு தீா்மானத்தை நகா்க் குழு உறுப்பினா் குமரவேல் முன்மொழிந்தாா்.

மாநாட்டில் 15 போ் கொண்ட புதிய நகா் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். நகா் குழு செயலராக எஸ்.ராஜா தோ்வு செய்யப்பட்டாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT

தீா்மானங்கள்: சிதம்பரம் நகரில் நீா்நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மாற்று இடம் வழங்காமல் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் நோயாளிகள் அனைவருக்கும் கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும், இந்த மருத்துவமனையில் மருத்துவா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அண்ணாமலைப் பல்கலைக்கழக தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT