கடலூர்

சம்பா சாகுபடிக்கு பயிா்க் கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

9th Oct 2021 04:23 AM

ADVERTISEMENT

சம்பா நெல் சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உடனடியாக பயிா்க் கடன் வழங்கப்பட வேண்டும் என கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இந்தக் கூட்டமைப்பு நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிவ.சரவணன், எம்.நீலமேகம், எஸ்.சிற்றரசு, எஸ்.ரங்கநாயகி, ஆா்.நடராஜன், கே.ரவிச்சந்திரன், என்.முனுசாமி, ஆ.வீரபாண்டியன், டி.சந்திரமோகன், சி.சேரன், பி.லட்சுமிகாந்தன், க.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 2020-21-ஆம் ஆண்டு நிவா், புரவி புயல், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 1431-ஆம் பசலி வருவாய் அடங்கல் ஆவணங்களை விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி உடனடியாக வழங்க வேண்டும், நிகழ் 2021-22 -ஆம் ஆண்டு சம்பா நெல் சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT