தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கடலூா் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட தமிழ்ப் பேச்சுப் போட்டியில் சிதம்பரம், அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளில் படிக்கும் பிளஸ்1 மாணவி செ.தரணிஸ்ரீ முதலிடம் பெற்றாா்.
பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.திருமுருகன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா.அன்பரசி ஆகியோா் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் வி.பொ்லின் வில்லியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.