கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் தனி வட்டாட்சியா் ஜெயசெல்வி மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளா் தாட்சாயிணி தலைமை வகித்தாா். முகாமில், மின்னணு குடும்ப இல்லாத 30 திருநங்கைகளுக்கு அதைப் பெறுவதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்தனா்.