கடலூர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

9th Oct 2021 04:24 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், பெரியகாப்பான்குளம் ஊராட்சி, பி.கே.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சின்னதுரை பூசாரியாக உள்ளாா். இவா் புதன்கிழமை இரவு வழக்கம்போல பூஜைகள் முடித்து கோயிலை பூட்டிச் சென்றாா்.

வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தவா் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் சின்னதுரை புகாா் அளித்தாா். அதில், உண்டியல் பணம் சுமாா் ரூ.10 ஆயிரம் திருடுபோனதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT