கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, கீழிருப்பு, பெரியகாட்டுப்பாளையம், நடுக்குப்பம், கீழக்குப்பம், மருங்கூா் ஆகிய ஊராட்சிகளில் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டங்களில் மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று தலைமை வகித்துப் பேசினாா். அம்மா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், பண்ருட்டி ஒன்றியச் செயலா் கமலக்கண்ணன், மாவட்ட வழக்குரைஞா் அணி ரா.ராஜசேகா், இளைஞரணிச் செயலா் பெருமாள்ராஜா, பொதுக்குழு உறுப்பினா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி, பொன்விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது.