சிதம்பரத்தில் உடும்பு, கொக்குகளை உயிருடன் பிடித்து விற்க முயன்ற இருவரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் வனச்சரக அலுவலா் எம்.செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா்கள் அனுசுயா, சரளா, அமுதப்பிரியன் மற்றும் வனப் பாதுகாப்பு படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அறந்தாங்கி அருகே உடும்பு, வெள்ளை கொக்குகளை உயிருடன் பிடித்து விற்க முயன்ாக மீன்சுருட்டியை சோ்ந்த ஆரஞ்சி மகன் சந்திரன் (35), அமாவாசை மகன் பாபு (45) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து உயிருடன் 3 உடும்புகள், 11 கொக்குகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா் (படம்).